- மிஸ்டர் மொக்கை பாரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.. பேண்டின் பின் பாக்கெட்டில் ஒரு குவார்ட்டர் பாட்டில் வேறு வைத்திருந்தார்.. வழியில் வாழைப்பழத் தோலில் வழுக்கி தொபீர் என்று கீழே விழ, பின்பக்கம் முழுவதும் கசகசவென்று ஒரே ஈரம்.. அதிர்ச்சியடைந்த மொக்கை இறைவனிடம் வேண்டினார்.. "கடவுளே..! இந்த ஈரம் அடிபட்ட ரத்தமாகவே இருக்கட்டும்.. குவார்ட்டர் பாட்டில் உடைந்து போயிருக்கக் கூடாது..!"
- மொக்கை தன் நண்பரின் கிராமத்துக்குப் போயிருந்தார்.. அங்கே புது ரோடெல்லாம் போட்டிருந்தார்கள்.. அதுபற்றி பேச்சு வந்த போது.."மொக்கா.. எங்க ஊருக்கு ரோடு போட்டு முதல் முதல் வந்த வாகனம் எது சொல்லு பார்ப்போம்..?"
"உங்க ஊர் பண்ணையார் கார்..."
இல்லே..
"ரோடு திறந்து வைக்க வந்த மந்திரி கார்.."
அதுவும் இல்லே...
"அரசாங்க அதிகாரிகள் வந்த ஜீப்...?"
ம்ஹூம்.. கிடையவே கிடையாது..
"எனக்குத் தெரியலே.. நீயே சொல்லு.."
ரோட் ரோலர்..!
- மிஸ்டர் மொக்கை முதன்முதல் வெளிநாடு போனபோது நடந்தது இது.. நல்ல பசி எடுக்கவே, மொக்கை ஒரு 5 நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தார்.. சுத்தமான சீருடையில் ஓட்டல் சின்னம் தாங்கிய ஊழியர் பணிவுடன் வரவேற்றார்.. இருக்கையில் அட்டகாசமாக அமர்ந்த மொக்கை, எதிரே நோட்டமிட்டார்.. விதவிதமான பீங்கான் குப்பிகளில் பல திரவங்கள் இருந்தன. மேல்நாட்டு முறை தனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்ள விரும்பிய மொக்கை அங்கு வளையமொன்றில் தொங்க விடப்பட்டிருந்த உயர்ரக துவாலையை ஸ்டைலாக உருவி, தன் கழுத்துக்குக் கீழே கட்டிக்கொண்டார்.. தான் உணவருந்தத் தயார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பொருட்டு கையை உயர்த்தி, ஊழியரை அருகில் அழைத்தார்.. பவ்யமாக வந்த பணியாளர் உயர்ரக ஆங்கிலத்தில் மொக்கையிடம் கிசுகிசுத்தார்.. "ஹோட்டல் நிக்சனின் அழகு நிலையம் உங்களை வரவேற்கிறது.. கட்டிங்கா... ஷேவிங்கா சார்..?"