Buy Amazing Products from Amazon

Friday, November 16, 2007

முடிஞ்சா சிரிங்க!

ஜோக்-1 :
தயாரிப்பாளர் : படத்தோட பெயரை பார்த்ததுமே அத்தனை பேரும் தியேட்டருக்கு அடிச்சு பிடிச்சு ஓடி வரணும். அப்படியொரு டைட்டில் சொல்லுங்க.
இயக்குநர்: தண்ணி லாரி


ஜோக்-2 :
என்னோட தொப்பியை யாராவது பார்த்தீங்களா?
உங்க தலையிலதான் சார் இருக்கு...
நல்லவேளை சொன்னீங்க. இல்லேன்னா நான் வீட்டுக்கு தொப்பி இல்லாம போயிருப்பேன்


ஜோக்-3 :
பிச்சை : அம்மா... பிச்சை...
அம்மா : ரெண்டு நாளைக்கு முன்னால மீந்த சோறும், மீன் குழம்பும் இருக்கு. போடட்டுமா?
பிச்சை : போடுங்கம்மா... போடுங்க. போற உயிர் எப்படி போனால் என்ன?

ஜோக்-4 :
பிச்சை : நேத்து ஐயா சமைக்கலியாம்மா?
அம்மா : எப்படி கண்டுபிடிச்சே. அவரோட அப்பா ஊரிலிருந்து வந்திருந்தாங்க. அவங்க சமைச்சதுதான் இது?
பிச்சை : சமையல்ல ஒரு முதிர்ச்சி தெரியுது.

1 comment:

ரசிகன் said...

எல்லா ஜோக்குமே நல்லாயிருக்குங்க..

//பிச்சை : அம்மா... பிச்சை...
அம்மா : ரெண்டு நாளைக்கு முன்னால மீந்த சோறும், மீன் குழம்பும் இருக்கு. போடட்டுமா?
பிச்சை : போடுங்கம்மா... போடுங்க. போற உயிர் எப்படி போனால் என்ன?//

ஹா..ஹாஅ.. இது ரொம்ப ரொம்ப சூப்பருங்கோ,.......