ஜோக்-1 :
""உடம்பு சரியில்லை.. ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு கொடுங்னு கேட்டேன். தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு..''
"அட, அப்படியா?''
"உனக்கு உடம்பு சரியில்லைன்னா, ஆபீசுக்கு எதுக்கு லீவு தரணும்?னு மடக்கி கேக்கறாரு..''
ஜோக்-2 :
"இன்னிக்கு நான் செய்த இட்லி கல்லு போல இருந்ததுக்கு நீ திட்டவே இல்லியே!''
"என்ன செய்ய.. "கல்லானாலும் கணவன்'னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே!''
ஜோக்-3 :
"நீங்க காதலிச்ச பெண்ணே உங்களுக்கு மனைவியா வருவா..!''
"அந்த தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யணும்?''
ஜோக்-4 :
"என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களையெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!''
"அப்படியா?''
"ஆமாம்.. நேத்துகூட துணிமணி துவைக்கும்போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப்போட்டுட்டேன்.. அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல... ஹி..ஹி..!''
1 comment:
ஹா..ஹா... தெய்வமே.. கொன்னுப்புட்டீங்க.. இப்பிடி ஜொக்கெல்லாம் சொல்லி .. வயரு வலிக்க சிரிச்சதுல.. பக்கத்து வீட்டுக்காரன் ஜன்னல தொறந்து சந்தேகமா பாக்கரான்..ஹிஹி..
கலக்கிட்டிங்க போங்க..
Post a Comment