Buy Amazing Products from Amazon

Friday, December 14, 2007

முடிஞ்சா சிரிங்க!

''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''

''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''

''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''

''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''

****************

'மந்திரியாரே....என் வீரத்தைப் புகழ்ந்து ஏராளமான பாடல்களைப் பாடிய கவிஞர் காத்தப்பன், இன்று ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் உள்ளாராமே..?!''

''இப்போதாவது நம்புகிறீர்களா மன்னா... பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பதை!''

****************

''அத்தே! நான் உங்ககிட்டே சண்டைக்கு வராமலிருக்கிறது உங்க கையில்தான் இருக்கு!''

''என் கையில் என்ன இருக்கு?''

''நாலு வளையல் இருக்கே... அதைக் கழட்டிக் குடுத்துட்டீங்கன்னா சண்டைக்கு வரமாட்டேன்!''

****************

'எதிரி மன்னனுடன் போர் அடுத்த மாதம்தானே தொடங்குகிறது... அதற்குள் ஏன் மன்னா அவன் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து ஓடி வருகிறீர்கள்.?''

''இது சோதனை ஓட்டம் அமைச்சரே...''

2 comments:

ரசிகன் said...

ஹா..ஹா...

ரொம்ப சூப்பரா இருக்குங்க..
ஜோக்கெல்லாம்..நல்லா செலக்ட் பண்ணியிருக்கிங்க...

வாழ்க உங்கள் ரசனை...

Manuneedhi - தமிழன் said...

ரொம்ப நன்றி நண்பரே! தொடர்ந்து பாருங்க....அப்பறம் இன்னொரு விசயம். புதுசா ஒரு தமிழ் இணையதளம் "அதிகாலை" www.adhikaalai.com அப்படீன்னு வரப்போறதா கேள்விப்பட்டேன். நீங்க ஒங்க படைப்புகள அதுக்கு அனுப்பி வைக்கலாமே! அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி editor@adhikaalai.com தொடர்ந்து வலைப்பூவ பாத்து, ஒங்க மேலான கருத்துக்கள பதிவு செய்ங்க....நன்றி!