Buy Amazing Products from Amazon

Sunday, September 30, 2007

1.முடிஞ்சா சிரிங்க?!

மனைவி : என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
கணவர் : டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர்>பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும், அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க..

''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க'' ''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும் போது இளிச்சவாயன்தான்.

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.

என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது

1 comment:

மங்களூர் சிவா said...

அருமை!
அருமை!!
அருமை!!!