குழந்தை அழுகுது அதை கவனிக்காம நீ சீரியல்பார்த்திட்டிரிக்கியே
அட சும்மா இருங்க அதுவும் சீரியல் பாத்துத்தான் அழுவுது!
*******
என்னங்க மாத்திரையின் ஓரங்களை எல்லாம் வெட்டறீங்க
ஆமா மாத்திரையாலே சைட் எஃபெக்ட்ஸ் எதுவும் வந்திடக்கூடாதேன்னுதான்!
*******
தண்ணீலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க
அப்படி எடுக்கலேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்குமே!
*******
பெண் 1 : இந்தப்புடவை நல்லாருககாடி எனக்கு
பெண் 2 : ஜோரா இருக்குது, ஆமா நீ புடவை எடுத்தது உன் ஹஸ்பண்டுக்குத் தெரியுமா
பெண் 1 : அட நீவேற கடைககாரருக்கே தெரியாதே!
*******
தண்ணி தெளிச்சி ஏன் கோலம் போடறாங்க
ஏன்னா கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடுமே அதான்!
*******
1மே
2மே
3மே
4மே
5மே
என்ன பாக்கறீங்க... அப்றோம் நான் ஒண்ணுமே அனுப்பலேன்னு நீங்க சொல்லிடக்கூடாதில்ல
*******
வடிவேலு : அமெரிக்கா போகலாம்னு நினைக்றேன் அதுக்கு எவ்வளவு செலவாகும்
பார்த்திபன் : நினைக்கறதுக்கெல்லாம் எதுக்குடா செலவு முட்டாள்!
*******
ரேடியோல இன்னிக்கு மழை வரும்னு சொன்னாங்க நீ கேட்டியா
நான் கேட்கல அவங்களாவேதான் சொல்லீருப்பாங்க!
*******
DYE க்கும் DIEக்கும் என்ன வித்தியாசம்
DYE, மண்டைலபோடறது DIE-மண்டையப்போடறது
*******
IAS ! IAS ! IAS! அப்பாடா உன்னை ஒரு வழியா IAS படிக்கவச்சிட்டேன்
நாளைக்கு ICS படிக்கவச்சிடறேன்! ம்ம்ம்.....